கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடத்திய செக்கச் சிவந்த வானம் குழு கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட
கூர்மையான பொருட்களை போட்டுவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில்
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து
வரும் படம் செச்கச் சிவந்த வானம். கடந்த வாரம் படப்பிடிப்பு கோவளம் கடற்கரையில் நடந்துள்ளது. விஜய்
சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பை முடித்துக்
கொண்டு ஏப்ரல் 24ம் தேதி படக்குழு அங்கிருந்து கிளம்பியுள்ளது. மறுநாள் காலை கடற்கரைக்கு வந்த மக்கள்
அங்கு கிடந்த கண்ணாடித் துண்டுகள், கூர்மையான பொருட்கள் என்று குவிந்து கிடந்த குப்பையால் அதிர்ச்சி
அடைந்தனர். நாங்கள் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கிருந்து கிளம்பும் முன்பு அந்த இடத்தை சுத்தம்
செய்துவிடுவோம். கோவளம் கடற்கரையையும் சுத்தம் செய்துவிட்டு தான் வந்தோம். எங்கள் குழுவை சேர்ந்த
20 பேர் சுத்தம் செய்தனர். கண்ணாடித் துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று மெட்ராஸ்
டாக்கீஸின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
People of Kovalam has accused Mani Ratnam and his Chekka Chivantha Vaanam team of
littering Kovalam beach after shooting some scenes there. Chekka chivantha vaanam
film shooting crew spoilt and littered , threw broken glass pieces on kovalam
beach.
#chekkachivanthavaanam #shooting #kovalambeach