புனேயில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனியின் அதிரடி அரை சதங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்களில் மற்றொரு திரில் வெற்றியை பெற்றது. 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி வரை போராடியது.
20 ஓவர்களில் 212 ரன்கள் இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. காலின் முன்ரோ 26, பிருத்வி ஷா 9, ஸ்ரேயாஸ் ஐயர் 13, கிளென் மேக்ஸ்வெல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார்.
vijay shankar hits 50 out of 28 balls