நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, ஆசிரியர் பணியில் இருந்து விலகிய சபரிமாலா ஜெயகாந்தன் மீண்டும் உண்ணாவிரதம் செய்ய தொடங்கி இருக்கிறார். நீட் தேர்வு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, சென்ற வருடம், தன்னுடைய ஆசிரியர் பணியை உதறிவிட்டு போராட்ட களத்தில் குதித்தார் சபரிமாலா ஜெயகாந்தன். பள்ளி ஆசிரியராக இருந்த அவர், அரசு பள்ளியிலேயே உண்ணாவிரதம் தொடங்கினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்காததை அடுத்து அவர் பணியைவிட்டு விலகினார்.