சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் வரும் மே 9-ம் தேதி வெளியாகும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
இசையமைத்துள்ளார்.
'காலா' படத்தின் இசை வெளியீட்டில் 7 பாடல்கள் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
தாழ்த்தப்பட்டவர்களையும், ஏழைகளையும் உயர்வாகப் புகழும் விதமான பாடல்கள் நிச்சயம் இப்படத்தில்
இடம்பெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏப்ரல் 27-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ்
தள்ளிப்போனது. அதனால், இசை வெளியீட்டையும் மே 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். படம் ஜூன் 7-ம்
தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 -ம் வருடத்தில் ஜூன் மாதம் 'கபாலி' படத்தின் பாடல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் ரஜினிக்காக
உருவான 'நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்...' பாடல் பட்டிதொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது. அதே
போல 'காலா' படத்திலும் வெறித்தனமான பாடல்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான அத்தனை படங்களிலும் பாடல்கள்
வித்தியாசமான இசையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுவும் இந்தப் படத்தில்
சூப்பர்ஸ்டாருக்கு என்றால் கேட்கவா வேண்டும்?
'கபாலி' இசை வெளியாவதற்கு முதல்நாளே பாடலின் சில நிமிடங்கள் ஆடியோவாக லீக் ஆகி வாட்ஸ்-அப்பில்
வைரலாகின. சமீபத்தில் வெளியான 'காலா' டீசரும் லீக் ஆனது. அந்த மாதிரி 'காலா' பாடல்கள் லீக்
ஆகக்கூடாது என்பதே படக்குழுவினரின் கவலை.
என்னதான் லீக் ஆனாலும், 'கபாலி' பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்பு யூ-ட்யூப் மற்றும் பாடல்
தளங்களில் செம ஹிட் ஆகின. அந்த மாஸ் ரஜினிக்கு எப்போதும் இருக்கும். மே 9 'காலா' இசையை
வரவேற்கத் தயாராவோம்.
Kaala music to be release on May 9. Santhosh narayanan composed music for
'kaala'. Kaala song release is coming soon. Kaala audio launch is on may 9th.
Kaala movie has 7 songs which is being released on may 9th.
#kaala #audiolaunch #songs