கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டை எதிர்க்கட்சியினர் தட்டி கேட்டதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர். கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கைத்தறி-துணிநூல், வீட்டுவசதி உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 18, 775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைந்து விட்டது.