இந்தியாவின் உதவியுடன் நேபாள் கட்டிக்கொண்டு இருக்கும், நீர் மின் திட்ட கட்டிடத்தில் குண்டு வெடித்து இருக்கிறது. இது நேபாளத்தில் ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும். நேற்று மாலை இந்த வெடிவிபத்து சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த நீர் மின் நிலையம் இந்தியாவின் உதவியுடன் மேற்கு நேபாளத்தில் கட்டுப்பட்டு வந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் இந்த மின் நிலையம் இந்திய பிரதமர் மோடி மூலம் திறக்கப்பட இருந்தது.