அர்ஜுன் ரெட்டி ஹிந்தி படம் ஹீரோவை மாற்றிய தயாரிப்பாளர்கள்

2018-04-27 2,587

அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கின் இயக்குனரை மாற்றச் சொன்ன ஹீரோவையே தயாரிப்பாளர்கள் மாற்றிவிட்டனர்.
தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்கள் முராத் கெதானி, அஸ்வின் வர்தே ஆகியோர் நடிகர் அர்ஜுன் கபூரை அணுகினார்கள்.
இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கு பதில் ஷாஹித் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் வாங்காவே இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பியுள்ளனர். இந்நிலையில் அர்ஜுன் கபூரோ இயக்குனரை மாற்றுமாறு கூறியுள்ளார். சந்தீப் இயக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் வாங்காவால் இந்தி படத்தை எடுக்க முடியுமா என்பதில் அர்ஜுனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நன்றாக இந்தி தெரிந்த ஒரு இயக்குனர் தான் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன்.
தன்னை வைத்து தேவர் படத்தை இயக்கிய அமித் சர்மாவை சந்தீப்புக்கு பதிலாக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்ஜுன். இது தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் சந்தீப் தான் இயக்க வேண்டும் என்று விரும்பினர். இதையடுத்து அர்ஜுனை மாற்றிவிட்டு ஷாஹித் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ளது. ஹீரோயினை இன்னும் தேர்வு செய்யவில்லை. அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் த்ருவ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரீமேக்கை பாலா இயக்கி வருகிறார்.

Sandeep Vanga is going to Bollywood with the hindi remake of his superhit movie Arjun Reddy. Arjun Kapoor has reportedly lost the Hindi remake to Shahid Kapoor after he suggested the producers to change the director.

#arjunkapoor #shahidkapoor #arjunreddy #hindiremake