ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம் ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலாவிடம் சிறையில் விசாரணை நடத்தவுள்ளேன் என்றார்.
Investigative officer Santhanam said that investigating will be conduct Nirmala Devi in the audio issue.