சதுரங்க வேட்டை ஹீரோயின் ரகசிய திருமணம்

2018-04-25 3,404

சதுரங்க வேட்டை படம் புகழ் இஷாரா நாயர் துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் இஷாரா நாயர். விதார்த் நடித்த வெண்மேகம் படம் மூலம் ஹீரோயின் ஆனார் இஷாரா. அதை தொடர்ந்து அவர் பப்பாளி படத்தில் நடித்தார்.
அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து வெளியான சதுரங்க வேட்டை படம் தான் இஷாராவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
இஷாரா துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சாஹில் என்பவரை இந்து முறைப்படி கடந்த 18ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 நாட்களுக்கு பிறகு தான் அனைவருக்கும் அது தெரிய வந்தது.
இஷாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் துபாயில் செட்டிலாக உள்ளாராம். அவர் இப்படி ரகசிய திருமணம் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இஷாரா நாயரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தில் நடித்த போது இயக்குனர் கெவின் ஜோசப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இஷாரா புகார் தெரிவித்தார். காட்சிகளை இயக்குனர் மிகவும் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். பேசும் போது எல்லாம் இயக்குனர் தன்னை தொட முயன்றார் என்று அவர் கூறினார்.

Sathuranka Vettai fame Ishaara Nair has married a Dubai based NRI named Sahil in a hush hush manner on april 18. People came to know about the wedding on april 23 only.

#sadhurangavettai #ishaaranair #wedding

Videos similaires