கிராம சபை கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் 25 ஆண்டுகளாக நம் கையில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து அதன் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது : கிராம சபை என்பது போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தோன்றலாம். இது வயலும், வாழ்வும் ஏன் நகரத்தில் வாழ்பவர்களும் சம்பந்தப்பட்டது.
MNM party leader insists government to make arrangements for Grama Sabha panchayats which benefits the people in village and with these we may find a solution for cauvery issue too he added.