இன்று பிறந்தநாள் கொண்டாடும் சச்சினை திக்குமுக்காட வைத்த டெஸ்ட் எது தெரியுமா!?

2018-04-24 2

கிரி்க்கெட் என்பது ஒரு மதமாக இருந்தால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இன்று பிறந்தநாள் காணும் சச்சின் டெண்டுல்கரை, திக்கமுக்காட வைத்த ஒரு போட்டி நிகழ்ந்தது. அது அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடியதுதான். இந்திய கிரிக்கெட் பல வீரர்களை பார்த்துள்ளது. பெயரைக் குறிப்பிட்டால், அதில் சிலரை நமக்கே தெரியாமல் விட்டுவிடும் வாய்ப்பும் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்திய அணிக்காக தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர், அளித்தும் வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வரலாறு என்று இப்போது எடுத்துக் கொண்டாலும், அதில் முதலில் நமது கண்முன்பே வருவது சச்சின் டெண்டுல்கர். சச்சின் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடியதுடன், கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் தன்னுடைய பெயரில் பதிவு செய்துள்ளார். அது பற்றி எழுதினால், பல ஆயிரம் பக்கங்களுக்கு மேல் போகும். 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள், 463 ஒருதினப் போட்டிகளில் 18,426 ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள், இந்த சாதனைகளை இன்றைய சூழ்நிலையில் முறியடிப்பது என்பது மிகவும் சாதாரணமாக விஷயமில்லை. இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், ஒருதினப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக, தன்னுடைய 200வது டெஸ்ட் போட்டியில், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தார். அதில்தான் அவருக்கு கடுமையான சோதனை ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சினுக்கு அந்தப் போட்டியில்தான் மிகப் பெரிய சோதனை நேர்ந்தது. முதல் நாள் இறுதியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. சச்சின் களமிறங்கினார். மைதானத்தில் உள்ள பெரிய ஸ்கீரினில் சச்சினின் தாய், போட்டியைப் பார்க்கும் காட்சி வெளியானது. அதைத் தொடர்ந்து மனைவி அஞ்சலி என, தனக்கு நெருக்கமானவர்கள் படங்கள் அந்த ஸ்கீரினில் காட்டப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்தப் போட்டி குறித்து சச்சின் குறிப்பிட்டார். என்னுடைய கடைசி டெஸ்ட். ஆனால், அதுதான் என்னுடைய தாய் மைதானத்தில் நேரடியாக பார்க்கும் முதல் போட்டி. மிகவும் இக்கட்டான, உணர்ச்சிபூர்வமான நிலையில் இருந்தேன். இத்தனை ஆண்டுகள் தாய்நாட்டுக்காக விளையாடிய நான், கடைசி போட்டியிலும் தாய்நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். ஆனால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் போட்டியில் இருந்தேன் என்று சச்சின் கூறியுள்ளார். சச்சினை கிரிக்கெட் கடவுள் என்று கூறுவதற்கு இதைவிட மிகச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. இன்று பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்துவதில் நாம் பெருமை அடைவோம்.


Sachin Tendulkar birthday today. He recalled his last test match which was the first match his mother has witnessed in the stadium.

#cricket #sachintendulkar #birthday

Videos similaires