அதிமுக- பாஜக இரட்டை குழல் துப்பாக்கி : நமது அம்மா நாளிதழ்

2018-04-24 1,019

அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் என்கிற கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் பிரசுரித்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்டு நமது அம்மா நாளிதழ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவருகிறது. இதில் வெளியான கட்டுரை ஒன்றில், அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்; இரண்டு கட்சிகளின் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என கட்டுரை வெளியானது.

A freelance contributor and two sub-editors were sacked from service for the Pro BJP Article in AIADMK's mouthpiece Namadhu Amma.

Videos similaires