தான் குடிப்பதை நிறுத்திவிட்டதாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான நடிகை பூஜா பட் தற்போது படங்களை இயக்குவது, தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கதுவா விவகாரம் குறித்து பேச மறுத்த நடிகர் அமிதாப் பச்சனை அவர் தாக்கிப் பேசியுள்ளார்.
இதை பார்த்த அமிதாப் பச்சனின் ரசிகர்கள் பூஜாவை குடிக்கு அடிமை என்று விளாசியுள்ளனர்.
படத்தில் மட்டும் தான் அமிதாப் பச்சன் பெண்களின் உரிமைக்கு போராடுவாரா என்று பூஜா கேள்வி எழுப்பினார். முழுநேரம் குடிக்கு அடிமையானவர் எல்லாம் இப்படி கேட்கத் தேவையில்லை என்று அமிதாபின் ரசிகர்கள் பூஜாவை கலாய்த்துள்ளனர்.
மூளையே இல்லாத மதுவுக்கு அடிமையாகியுள்ள பூஜாவால் மட்டும் தான் அமிதாப் பச்சனை பற்றி இப்படி பேச முடியும். பப்ளிசிட்டிக்காக அவர் போதையில் உளறுகிறார் என்று அமிதாப் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் ஒன்றும் குடிக்கு அடிமை இல்லை. 2016ம் ஆண்டோடு குடிப்பதை நிறுத்திவிட்டேன். 485 நாட்களாக மதுவை தொடவில்லை. மதுப் பழக்கம் பற்றி மக்கள் பேச மறுக்கும் நிலையில் நான் தைரியமாக பேசினேன் என்று பூஜா பதிலடி கொடுத்துள்ளார்.
நல்ல வேளை நான் சரியான நேரத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்தினேன். நான் தற்போது நலமாக உள்ளேன். ஆனால் கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டது. பெற்றோருக்கு குடிப்பழக்கம் இருந்தால் நமக்கும் வந்துவிடுகிறது என்கிறார் பூஜா. அஜீத், பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் படத்தில் நடித்தவர் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது.
Amitabh Bachchan's fans trolled actress cum director Pooja Bhatt who criticised the legend over Kathua incident. Pooja said that she is no longer an alcoholic.
#amitabhbachchan #poojabhatt #kathua