கிருஷ்ணகிரியில் ஏசி வெடித்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்
கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வசிப்பவர் ஆல்பட் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஞ்சலாமேரி இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு ஆல்பட் அஞ்சலாமேரி ஆகிய இருவரும் மட்டும் வீட்டில் குளிர்சாதன கருவியை பயன்படுத்தி கண்டு உறங்கியுள்ளனர்.
இன்று காலை 5 மணியளவில் ஆல்பட் மட்டும் நடைபயிற்சி செல்ல எழுந்து சென்றுவுள்ளார். அவரது மனைவி அஞ்சலாமேரி வீட்டில் படுத்துக்கொண்டு இருந்துவுள்ளார்.நடைபயிற்சிக்கு சென்ற ஆல்பட் மீண்டும் வீட்டிற்க்கு வந்தபோது வீட்டின் படுகை அறையில் புகை மூட்டம் அதிகளவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போத குளிர்சாதன கருவி வெடித்து அதிலிருந்து தீபிடித்து எரிந்து இருப்பது இந்த தீயில் தனது மனைவி அஞ்சலாமேரி காயம் அடைந்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து தெரிந்தது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் அஞ்சலாமேரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீசார் ஏசி சிலிண்டர் வெடித்தது இயற்கையா அல்லது கொலை செய்ய செயற்கை செய்த சதியா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.