குன்னூரில் நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்கள் பல பங்கேற்று சாகசங்களை நடத்தியதுடன், சுற்றுலாபயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன் நாட்களில், 'நீலகிரி கெனல் கிளப்' சார்பில், நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.