நகராட்சி பணியாளரை தாக்கிண அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டி 200&க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பரபரப்பு
நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியில் துப்பபுரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பிளக்ஸ் பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததாக தெரிகிறது. அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பணியில் இருந்த நகரமைப்பு ஆய்வாளர் முருகேசன் என்பவரை தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டித்து நகராட்சி பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை துப்பரவு பணிக்கு வந்த நகராட்சி பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் நகராட்சி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரமைப்பு ஆய்வாளரை தாக்கியவர்களை கைது செய்திடும் வரை பணிக்கு செல்வதில்லை என தெரிவித்து குப்பை அள்ளும் வாகனங்களை அலுவலகத்தில் நிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளும் பணி, சாக்கடை சுத்தம் செய்யும் பணி, தெருகளை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட அனைத்தும் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது