சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் அறுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருமுல்லைவாயில் இந்தியன் வங்கி அருகே சாலையில் நடந்து சென்ற பூபதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றனர்.இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்தபோது அதில் மர்ம நபர்கள் சங்கலி அறுத்த காட்சி பதிவாகியுள்ளது அதனை வைத்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் . இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது