பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்!- வீடியோ

2018-04-20 1,767

தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாடகர் அலி ஜாபர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாடகியும், நடிகையுமான மீஷா ஷஃபி தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பாடகி மீஷா ஷஃபி பாலியல் தொல்லை குறித்து ட்வீட்டியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் அலி ஜாபர் மீது தான் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் பிரபலமாக இருந்தாலும் ஒரு பெண்ணாக சில விஷயங்கள் பற்றி பேசுவது மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை. பிரபலமான பாடகியான எனக்கே இது நடந்தால் இந்த துறைக்கு வர விரும்பும் எந்த பெண்ணுக்கும் இது நடக்கலாம் என்பதே என் கவலை. என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது.

Pakistani singer and actress Meesha Shafi took to the micro-blogging site and shocked her fans with her revelation that she was sexually harassed by Ali Zafar more than one occasion and he harassed her despite knowing that she's a mother of two children.

Videos similaires