ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.
ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் பஞ்சாப் அணி கெயில் போன்ற சிக்ஸர் ஹீரோக்கள் மூலம் மிகவும் வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது.
kings xi punjab won the toss and choose to bat first