சாலையை கடக்க முற்பட்ட கருவுற்ற பெண் புள்ளி மான் டேங்கர் லாரி மோதி பலியானது.
திருவள்ளுர் மாவட்டம் மணலி விரைவு சாலை ரவுண்டானா அருகே . கருவுற்ற நிலையில் நான்கு வயது மதிக்கதக்க பெண் மான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அவ்வழியேவந்த டேங்கர் லாரி . மான் மீது மோதி விட்டு நீற்காமல் சென்று விட்டது. இதில் மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி வன ஊழியர் ஜெய் வினோத் மானின் உடலைக் கைப்பற்றி வண்டலூர் உயிரியல் பூங்கவிற்கு கொண்டு சென்றார்