திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தை குறிவைத்து தாக்குவது ஏன் என்று தெரியவில்லை என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். திடீரென ஒரு இயக்குநர் ரஜினிகாந்த்தை குறி வைப்பது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள பிரச்சினை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் என்பன உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்தும் பேசியதாக கூறினார்.