வருமான வரித்துறை நேற்றைய தினம் சம்பளதார்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி வருமான வரி கணக்கு தாக்கலின் போது தவறான தகவல்களை அளிக்கும் நப்ர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் ப்ராசசிங் மையம் வருமான வரி கணக்கு தாக்கல் ஆவணங்களை பெற்று சரிபார்த்து வருகிறது. இந்த நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி சில வரி கட்ட வேண்டிய சம்பளதாரர்கள் கூட சலுகைகள் பெறுவதற்காக வரி ஆலோசகர்களின் ஆலோசனையை கேட்டு தவறான தகவல்களை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Income Tax department warned salaried taxpayers should not submit wrong informations to unscrupulous advisors or planners who help them in preparing wrong claims to get tax benefits