மூன்று நாடாக்களாக காணாமல் தேடப்பட்டு வந்த 9 ம் வகுப்பு மாணவன் ஏரியில் சடலமாக மீட்க்கபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.
சென்னை திருமுல்லைவாயில் முருகப்பா காலனியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் தினேஷ் தனது வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவன் மூன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் தொடர்ந்து மாணவனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில்ஆண் சடலம் ஒன்று புழல் ஏரியில் மிதப்பதாக வந்த தகவல்களை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு முதல் கட்டமாக இறந்து போனது திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ரவியின் மகன் 9ம் வகுப்பு மாணவன் தினேஷ்/14 என்பதை அடையாளம் கண்டனர்.சடலத்தை மீட்ட திருமுல்லைவாயில் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் ஏரியில் சடலமாக முடக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.