ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.