கர்நாடகாவில் 7 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு போலீஸ் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு போலீஸ் சோதனை அதிகரித்துள்ளது.