மூன்று பெண்களுக்குமே டிமிக்கி கொடுத்த ஆர்யா- வீடியோ

2018-04-18 1

அனைவரும் எதிர்பார்த்தபடியே செய்து விட்டார் எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா.
ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று இரவு நடைபெற்றது. இதில் சூசனா, அகாதா, சீதாலட்சுமி ஆகிய மூவரில் ஒருவரை மனைவியாக்குவார் ஆர்யா என்று கூறப்பட்டது.
ஆர்யாவை பார்த்தால் இதில் யாரையும் தேர்வு செய்யாமல் டிமிக்கி கொடுத்துவிடுவார் என்றே பலரும் தெரிவித்து வந்தனர்.
மக்கள் எதிர்பார்த்தபடியே ஆர்யா அந்த 3 பெண்களில் யாரையுமே தேர்வு செய்யவில்லை. பெண்ணை தேர்வு செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.
படங்கள் ஓடாமல் நிதி நெருக்கடியில் இருந்த ஆர்யாவுக்கு தொலைக்காட்சி சேனல் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்ததால் வந்து பெண்களுடன் கடலை போடுகிறார். அவர் நிச்சயம் யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று மக்கள் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வந்தனர்.
யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்ற முடிவோடு வந்திருந்தால் அந்த பெண்களுடன் ஏன் இவ்வளவு நெருக்கமாக பழக வேண்டும். இவர் செய்த சேட்டையால் அந்த பெண்களின் வாழ்க்கை வீணாகாதா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நான் ஒருவரை தேர்வு செய்தால் மக்கள் அந்த பெண்ணை பற்றி இல்லாமல் நிராகரிக்கப்பட்ட 2 பெண்களை பற்றி தான் பேசுவார்கள். அதை எல்லாம் நினைக்கும்போது சந்தோஷப்படவா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை என்றார் ஆர்யா.
நிராகரிக்கப்படும் இரண்டு பேரின் கல்யாணம் நின்று போனது மாதிரி கவலையாக உள்ளது. யார் மனதையும் என்னால் காயப்படுத்த முடியாது. என்னால் யார் மனதையும் புண்படுத்த முடியாது. மேடையில் அனைவர் முன்பும் 2 பெண்களை நிராகரிக்க முடியாது. இன்று இந்த மேடையில் என்னால் ஒரு முடிவை எடுக்கவே முடியாது. எனக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இரண்டு குடும்பத்தாரை கஷ்டப்படுத்துவது பாவம் என்று நினைக்கிறேன். ஒரு பெண்ணை தேர்வு செய்து பெயரை அறிவிப்பது நியாயம் இல்லை என்று ஆர்யா தெரிவித்தார்.
ப்ரொமோ வீடியோவில் ஆர்யா சூசனா அருகில் சென்று அவரை கட்டிப்பிடிப்பது போன்று காட்டினார்கள். ப்ரொமோவை நம்ப முடியாது, நிஜத்தில் ஏமாற்றிவிடுவார்கள் என்று பார்வையாளர்கள் சொன்னது சரியாகிவிட்டது.

Arya as expected by people has not selected his bride from Enga Veetu Mapillai television programme. He said that he wants some more time to take a decision.

#arya #engaveetumapillai #colorstv