பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை

2018-04-17 4,487

மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் எவின் லூயிஸ் அதிரடி அரைசதம் அடித்தனர்.

அடுத்து விளையாடிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனியாளாக போராடி ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார். ஆனால், பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில், மும்பைக்கு இந்த சீசனில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.


mumbai indians beat royal chalangers banglore

Videos similaires