ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிஞ்ச்

2018-04-17 699

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை ஏழு ஐபிஎல் அணிகளுக்கு விளையாடி, அதிக ஐபிஎல் அணிகளுக்கு விளையாடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது.

இதில் இந்திய வீரர்களுடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கியுள்ளார், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச். இது அவர் பங்கேற்கும் ஏழாவது அணியாகும்.

aron finch played almost all team in ipl all season

Videos similaires