நான் நிர்மலா தேவி கிடையாது.. குமுறும் பாஜக பெண் பிரமுகர்- வீடியோ

2018-04-17 1

மூக வலைத்தளத்தில், பாஜகவை சேர்ந்த ஜெஸ்ஸி முரளிதரனை தவறாக சித்தரித்து, பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என பரப்பி வருவதாக பாஜக ஊடக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. பாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழக ஊடக பிரிவு, தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: இவர் பெயர் ஜெஸ்ஸி முரளிதரன். தமிழக பாஜக வைச் சேர்ந்தவர். இவரது புகைப்படத்தை, தவறாக சித்தரித்து, இவர்தான் பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்!

BJP media cell claim that the social networking site is misleading the BJP's Jesse Muralitharan with sexual professor Nirmala Devi

Videos similaires