பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் ஆசையை பூர்த்தி செய்ய 4 மாணவிகளிடம் செல்போனில் படுக்கைக்கு அழைக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் மாதர் சங்கங்களும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தின. இதையடுத்து கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
Professor Nirmala Devi's case transferred to CBCID who has trapped in inviting students to share bed with Madurai Kamarajar University higher officials.