மூதாட்டியை கொலை செய்து பல லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கும்பகோணம் அருகில் உள்ள ஆடுதுறை செட்டித்தெருவில் ஹதிஜா பீவி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் சபீர் அகமது வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு ஹதிஜா பீவி தனியாக இருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டில் புகுந்து ஹதிஜா பீவியை அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகளையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் இது தொடர்பாக போலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்