புரோக்கராக மாறிய பேராசிரியை..வெளியான அதிர்ச்சி ஆடியோ

2018-04-16 1

அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிக்காக மாணவிகளை படுக்கைக்கு அனுப்ப அவர்களை மூளைச் சலவை செய்யும் ஆடியோ காட்சிகளால் பெற்றோர் மனதில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கிறார். அதற்கு அந்த மாணவிகள் அதுகுறித்து மீண்டும் பேச வேண்டாம் என மறுப்பு தெரிவிக்கின்றனர். எனினும் அடங்காமல் அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலில் தள்ளுவதற்காக கேப் விடாமல் 19 நிமிடங்கள் பேசும் ஆடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Videos similaires