தமிழ் புத்தாண்டு உலகத்தமிழர்களால் கொண்டாட்டம்

2018-04-14 12

உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.விளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் கனிகளை அலங்கரி த்து சாமி கும்பிட்டனர். கோவில்களில் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை மகிழ்ச்சிகரமாக தொடங்கினர். ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர். வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.

Tamil Puthandu marks the beginning of the Hindu solar calendar and the first Tamil month of ‘Chithirai’. Puthandu, also known as “Puthuvarsham” and “Varsha Pirappu”, is celebrated in Tamil Nadu and Pondicherry. Falling on April 14th These days, ‘panchangams’ are increasingly read at homes, by elders of the family.

Videos similaires