கர்நாடகாவில் சிம்புவுக்கு கட் அவுட்! வைரலாகும் சிம்புவின் #UNITEDFORHUMANITY- வீடியோ

2018-04-11 1

Actor Silambarasan – Simbu – called for a press conference to address issues such as the Cauvery dispute between Tamil Nadu and Karnataka, as well as the indefinite strike by the Tamil Film Producers’ Council. However, the actor ended up saying a bunch of things that no one really understood.

சிம்புவுக்கு கர்நாடக மக்கள் இடையே ஆதரவு பெருகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.
தங்களின் தேவைகளை அரசிடம் கூறி பெற முடியாதபோது மக்களுக்காக அவர்கள் போராடுவதில் பயன் இல்லை என்ற உண்மையை போட்டுடைத்தார் சிம்பு.
காவிரி பிரச்சனையை அரசியல்வாதிகள் அல்லாமல் இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா கொடுத்தார் சிம்பு.
அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு மக்களே சமாதானமாக பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற சிம்புவின் ஐடியாவுக்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.
சிம்பு என்ன அருமையான யோசனை தெரிவித்துள்ளார். எங்களுக்கு வன்முறை அரசியல் பிடிக்கவில்லை. சிம்புவை எங்களுக்கு பிடித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை குறித்து சிம்பு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசினார் சிம்பு. அப்படி அவர் பேசியதை பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.
அந்த பேட்டியில் சிம்பு ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.
தற்போது அதன்படி சிலர் #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் அப்பேட்டியில் சிம்பு கூறியவாறே புகைப்படங்களை பதிந்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ளோர் அங்கிருக்கும் அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து இந்த ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர்.
இந்த ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Simbu's video about solving Cauvery issue between Tamil Nadu and Karnataka in a peaceful way has got support from the people of Karnataka.

#simbu #cauveryproest #karnataka #unitedforhumanity

Videos similaires