ஒரே நாளில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையான பில்லிங்ஸ்!- வீடியோ

2018-04-11 829

கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியில் சென்னை அணியில் புதிதாக இணைந்து இருக்கும் சாம் பில்லிங்ஸ் என்ற இங்கிலாந்து வீரர் மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளார். ப்ப்பா என்ன மேட்ச் இது என்று உச்சு கொட்டும் அளவிற்கு இவர் விளையாட்டு நேற்று அமைந்தது. கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்தர் ஜடேஜா கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஷேன் வாட்சன், ராயுடு, பிராவோ, சாம் பில்லிங்ஸ் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். முக்கியமாக சாம் பில்லிங்ஸ் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Sam Billings becomes the most important player in CSK team after yesterday IPL match.