தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை ஒட்டி சென்றனர்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பச்சை பசேல் என புல் வளர்ந்துள்ளது இதனை சாப்பிட அருகேயுள்ள வனப்பகுதிகளில் இருந்து காட்டெருமைகள் சாலைக்கு வருவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பிக்கட்டி பகுதியில் விரைவாக வாகனங்கள் சென்றுக்கொண்டிருத நேரத்தில் திடீரென வளைவில் மேல் பகுதியில் இருந்து காட்டெருமைகள் சாலைக்கு தாவி குதித்து சாலையின் குறுக்கே சென்றது இதனை சற்றும் எதிர் பார்க்காத வாகன ஓட்டுனர்கள் சற்று நிலைதடுமாறி வாகனத்தை விரைவாக ஓட்டி சென்றனர் ஒருசில சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அடிக்கடி நெடுங்சாலையில் காட்டெருமைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஒட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது