தமிழ் சினிமாவில் அடுத்து ரெடியாகவிருக்கும் மிக முக்கியமான படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படம் தான். இந்தக் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஐந்தாவது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.