இரண்டு ஆட்டோ டிரைவர்களை தாக்கியது தொடர்பாக நடிகர் ஆகாஷ்தீப் சைகல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் ஆகாஷ்தீப் சைகல். டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
சூர்யாவின் அயன், விஜய் சேதுபதியின் கவண் படங்களில் நடித்துள்ளார் ஆகாஷ்தீப்.
மும்பையில் வசித்து வரும் அவர் பந்த்ரா பகுதியில் 38வது தெருவை ஒன்வே ஆக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
டிராபிக்கால் அப்பகுதி மக்களுக்கு தொல்லையாக இருப்பதால் ஒன்வே ஆக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பாதையை ஒன்வே ஆக்க போக்குவரத்து போலீசார் டிவைடர் வைத்துள்ளனர். இருப்பினும் ஆட்டோ டிரைவர்கள் மறுபக்கமாக வந்து அந்த பாதைய டூ வே ஆக்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அந்த வழியாக வந்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கும், சைகல் உள்ளிட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சைகல் மற்றும் சிலர் சேர்ந்து 2 ஆட்டோ டிரைவர்களை தாக்கியுள்ளனர்.
சைகல் உள்ளிட்டோர் தாக்கியதில் ஒரு ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைகலை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
Mumbai police have filed a case against actor Akashdeep Saigal and other for beating two auto drivers over road issue near his residence in Bandra.
#actor #arrest #akashdeepsaigal