காவிரிக்காக ஜேம்ஸ் வசந்த் இசையில் புது பாடல்- வீடியோ

2018-04-11 14

தமிழகமே சமீப சிலநாட்களாக போராட்டக்களமாகக் காட்சியளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் வாழ்வுரிமைக்காகக் களத்தில் குதித்துள்ளனர்.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சில வருடங்களாகவே, தமிழர்களின் பிரச்னைகளின் மீது கருத்துத் தெரிவித்து வருகிறார். தமிழர்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் ஜி.வி.பிரகாஷின் ட்விட்டரில் இருந்து ட்வீட் பறக்கும்.
ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி, சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நிர்ப்பந்தம் கொடுக்கும் விதமாக ஐபிஎல் மேட்சை புறக்கணிக்கலாம் எனும் ஐடியாவை வழங்கிய ஜேம்ஸ் வசந்தன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து காவிரிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.
மதன் கார்க்கி வரிகளில், ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான இந்தப் பாடலை சைந்தவி, சத்ய பிரகாஷ், ஆலாப்ராஜு, ஷ்ரவன் ஆகியோரோடு இணைந்து பாடியிருக்கிறார். இந்தத் தகவலை சைந்தவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாகவும், தமிழக மக்களுக்கு காவிரியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் உருவாகும் இந்தப் பாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.


Music director James Vasanthan, lyricist Madhan Karki, Singer Saindhavi GV Prakash makes a song to force to form Cauvery management board on Cauvery protest.

#cauvery #protest #newsong

Videos similaires