ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த போராட்டத்தின் போது, காவலர்கள் மீது தாக்குதல் நடந்த காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவத்தை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் நேற்று சேப்பக்கம் மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.