திருவிடந்தையில் நாளை நடைபெறும் ராணுவ கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவினையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவிடந்தையில் வருகிற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நான்கு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.