சென்னையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பை வழங்கி வழங்கியுள்ளது காவல்துறை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுவதால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என ஆர்ப்பாட்டக்கார்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று, சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதையடுத்து போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம், வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலை, தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து மைதானத்திற்கு சொகுசு பஸ்களில் அழைத்துவரப்படுவார்கள்.
Police provided security to the cricketers in Chennai as like as they are giving security to the Prime Minister.