சென்னை சேப்பாக்கம் மைதானம் திடீர் முற்றுகை-வீடியோ

2018-04-10 1

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை ரசிகர்கள் போல் வந்து திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காவிரிக்காக போராடி வரும் நிலையில் அதை திசை திருப்பும் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனினும் இன்று திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறவுள்ளன.