அரசுகள் துரோகம் செய்கின்றன...ஈஸ்வரன் ஆவேசம்...வீடியோ

2018-04-09 179

மத்திய மாநில அரசுகள் அதிக வருவாய் ஈட்டித்தரும் கொங்கு மண்டலத்திற்கு துரோகம் செய்வதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சாயம் மற்றும் தோல் தொழிற்சாலை கழிவு நீர்கள் ஆறுகளில் கலக்கப்படுவதால் விவசாய நிலம் பாதிப்படைந்து விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறினார். காவேரி மேலாண்மை வாரியம் தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மத்திய அரசுக்கு இதுவரை கண்டணம் கூட தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதல் இடத்தில் உள்ளது கொங்குமண்டலம் தான் என்றும் ஆனால் மத்திய மாநில அரசுகள் கொங்கு மண்டலத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாக தெரிவித்தார்.

DES : Eiswaran said that the central state governments are betraying the high-yielding Kongu region.