கத்தியால் குத்தி அண்ணனை கொலை செய்த தம்பி- வீடியோ

2018-04-09 368

15 ஆயிரம் பணம் வாங்கிய அண்ணன் பணம் தர மறுத்ததால் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி உட்பட 2 பேர் கைது.

புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார் குப்பம் பகுதியில் செல்வம் என்பவர் மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி ராஜேந்திரன் என்பவர், தனது அண்ணனிடம் 15 ஆயிரம் பணம் கடனாக கொடுத்துள்ளார் . பணத்தை திரும்ப கேட்டபோது தர மறுத்துள்ளார் அவரது அண்ணன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளான் தம்பி ராஜேந்திரன் இந்த கொலையில் ராஜேந்திரன் மற்றும் உடந்தையாக இருந்த உறவினர் புகழ் என்பவனும் கைது செய்த போலீசார் விசாரணையில் தனது அண்ணனிடம் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தால் கொலை செய்தேன் என்றும், இதே தம்பி ராஜேந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவி மயூரியை கடப்பாரையால் அடித்து கொன்றவன் என்றும்,மேலும் கொலை செய்யப்பட்ட செல்வம் குமார், தனது தம்பி ராஜேந்திரனை ஜாமீனில் வெளியே எடுத்து வந்து அண்ணனேயே கொலை செய்து உள்ளான் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Videos similaires