தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி அழுத்தம் தந்தால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். அதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய சீமான், பச்சைக்கும் சேர்த்து கருப்புக்கொடி காட்டுவோம் என்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது.