திருப்பூரில் இளைஞரை வெட்டிக்கொன்ற கணவர், அண்ணன் கைது- வீடியோ

2018-04-09 26

திருப்பூரில் கள்ளத்தொடர்பு காரணமாக காதலியின் கண் முன்னே இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குளித்தலையைச் சேர்ந்த பெண்ணின் கணவரையும், சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிவசக்தி நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கழுத்தில் முன்னும் பின்னும் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை திருப்பூர் மத்திய போலீசார் கைப்பற்றினர். அந்த சடலத்தின் சட்டைப்பையில் இருந்த செல்போனை ஆராய்ந்ததில், கொல்லப்பட்டது குளித்தலையைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. திருப்பூரில் வேலை செய்து வரும் அண்ணன் நாகராஜின் வீட்டுக்கு வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன.



Police on Sunday arrested three persons in connection with the murder of a youth last week.

Videos similaires