காவிரி பங்கீட்டுக்கான திட்டத்தை மே 3-க்குள் வகுக்க வேண்டும்

2018-04-09 6,782

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் மத்திய அரசும், கர்நாடகாவும் உச்சநீதிமன்றம் சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சொல்லி வருகின்றன.

SC to hear cases of centre filed explaination for scheme word in the final judgement and also the contempt of court filed by Tamilnadu and Puducherry today.

Videos similaires