திறமையை வெளிப்படுத்த காத்திருக்கும் அஸ்வின், தினேஷ் கார்த்திக்

2018-04-08 634

ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. பஞ்சாப் - டெல்லி போட்டியைப் போலவே, இந்தப் போட்டியும், தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோஹ்லியின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் போட்டியாகவே அமைகிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது. முதல் போட்டியே, இந்த சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன.

ashwin and dinesh karthik waiting for show their captancy in their 1st match.