சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ம.கவின் முக்கிய பிரமுகர்கள் கூண்டோடு விலகி, தினகரன் அணியில் நாளை இணைய உள்ளனர். ' கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இல்லை என்ற பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் களமிறங்கியிருக்கிறார் தினகரன்.
நாளை ஆயிரம் பா.ம.க தொண்டர்கள் இணைய உள்ளனர்' என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள். பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளரும் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவருமான சண்முகத்திடம், தினகரன் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.